Friday 15 March 2013

குட்டி குட்டியாய் அவள்....


தமிழாய் நீ....

உன் ''கர உச்சரிப்பில்
அழகாய் சிரிக்கிறது தமிழ்



பேச்சு...

காட்டுவழி பாதையாய் உன் மொழிதலில்
புரியாது வழிகிறேன் நான்.....

கூந்தல்...

மேகத்தினூடே மலையாய் மறைகிறது
உன் கூந்தலுக்குள் எனது கைகள்....

கனவு....

நெர்கதிரில் நிலா துயில்கிறது
நிழலாய் உனது கனவு....



சிரிப்பு....

கடலினடியில் முத்தாய் பளிச்சிடுகிறது
மழையினூடே இடியாய் உனது சிரிப்பு....

பயணத்திலும் நீ....

கானல் நீராய்
உன் முகம் தெரிவதால் தான்
என் பாலைவன பயணம் தொடருகின்றது....

உன் கோபம்....

சுட்டெரிக்கும் சூரியனாய் நீ
காணமுடியாது தலை குனிகிறேன் நான்...

உனது நான்கு கண்களின் மின்னலில்
என்மேல் தெறித்தது இடி...

சாரலாய் நீ....

மழை முடிந்தது...
கொஞ்சமாய் ஆங்காங்கே தூவானத்தின் சாரலாய் நீ...
மழை காதலனாய் நான்...

ஆறுதல்....

எனது கண்ணீர் குளத்தில்
தவளைகளாய் தாவுகிறது
உனது சிரிப்பு...

இருட்டிலும் நீ...

விழித்திரை இருட்டில் 
கனவுகளோடு நான்...
ஆங்காங்கே விண்மீன் சிதரல்களாய் நீ...

குழப்பம்....

நான் பகலின் இரவு...
நீ இரவின் பகல்...
தெளிந்து குழம்பியிருக்கிறேன் நான்...
குழப்பி தெளிவித்திருக்கிறாய் நீ....

துடிப்பு....

டிக்... டிக்... டிக்...
நீ எனது கடிகாரத்தை பார்த்தாய்...
நான் உனது இமைத்துடிப்பை பார்த்தேன்...

ஒளிர்வு...

அறை முழுவதும் வெளிச்சம்!!!
என் கனவில் நீ ஒளிர்வதால்...

பேருந்து தனிமை....

உனது நிறுத்தத்தில் இறங்கி விடுகிறது உயிர்....
வெற்றுடம்பாய் பேருந்தில் நான்...

தேடல்...

மழை நேரத்தில் 
கைகள் குடையை தேட 
கண்கள் உன்னை தேடுகிறது....

கோபம்...

என் கோபத்தின் நீளம்
உன் கண்களை நான் காணும் வரை...





No comments:

Post a Comment